தனியற்புதம் நீ
உன்னுடன் இருக்கும்
ஒவ்வொரு நிமிடங்களும்
தனியற்புதம் கொண்டவை!
பேசுவதற்கென்று வார்த்தைகள்
தேவைப்படாதவை!
மெல்லவே கரைய
அனுமதிப்பவை!
அமைதியாக கண்கள்
மூடும்போது..
ஆர்ப்பாட்டமாய் மனதில்
விரிபவை!
அழகான அத்தனை
நொடிகளும் ஆங்காங்கே
புள்ளிகளால் உன்னுடன்
மட்டுமே
இணைக்கப்பட்டுள்ளன!
ஆயிரம் அர்த்தமற்ற
என் போர்க்கணைகளுக்கு
மௌனப் புன்னகைகளால்
நீயிடும் உட்சபட்ச
முற்றுப் புள்ளிகளும்
அதில் அடக்கம்!