மழலைக் குழந்தை கேட்கும் கேள்விகள் ஆனந்தமே - புதுக்கவிதை

புதுக்கவிதை

இனிதே புதிதாய்ப் பிறந்த பச்சிளம்
...குழந்தையைக் காண்பது ஆனந்தம்;
கனவு களுடன் தூங்கும் குழந்தையின்
...முகத்தைக் காண்பது ஆனந்தம்;
தவழும் குழந்தை கையூன்றி, தள்ளாடி
...நகர்வதைக் காண்பது ஆனந்தம்;
நடைபயி லும்குழந்தைக் கைபிடித்து நடப்பதும்,
...காண்பதும் நமக்(கு)ஆ னந்தமே! 1

மழலைக் குழந்தை கேட்கும் கேள்விகள்
...அர்த்தமுள் ளதும்ஆனந் தமானதுமே;
சின்னஞ் சிறுகுழந்தை, நட்புடன் சுற்றித்
...திரிந்து விளையாடு வதானந்தம்;
பள்ளிச் சீருடையில், கையசைத்துச் செல்வதைக்
...காண்பது மிகமிக ஆனந்தம்;
பள்ளியில் கற்ற சொற்களை, பாடலைக்
...கேட்பதும் காண்பதும்ஆ னந்தமே! 2

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Nov-22, 9:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 91

மேலே