தொலைதூர_காதல்
மழை வரும் நேரம்!
குளிரும் தருணம்!
அருகினில்
காரணமின்றி
காத்திருக்கும்
குவளையில்
தேநீர்!
அவளின்றி அவனும்!
கலங்கிட!
அவனின்றி அவளும்!
உருகிட!
மழை நீரோடு
கண்ணீர் கலந்தோட!
ஏன்
இத்தனை சஞ்சலம்
என்று
வினா எழ!
காதலில் காத்திருப்பது
வலியும் சுகம் என்று!
உணர்ந்து
நினைத்து நினைத்து
இதழ் ஓரம்
சிறுபுன்னகை!
..... இவள் இரமி..... ✍️