தள்ளிச் செல்

*தள்ளிச் செல்*

" வெடியுங்கள்
பட்டாசு வெடியுங்கள்

நீங்கள் பட்டாசு
வெடித்தால் தான்
எங்கள் வீட்டில்
உணவு வேகும்.

கந்தகமில்லாமல்
அடுப்பெரிய
கந்தகத்தில்
வேக வேண்டும் நாங்கள்.

உழைத்தால்
நோயோடு வாழ்வோம்

உழைக்காவிடில்
பசியோடு சாவோம்.

மாற்று ஏற்பாடு
செய்திடத்தான்
எவருக்கும் மனமில்லை.

தீபாவளி முடிந்து
புது வருடம் வரப் போகிறது.

பட்டாசுப் பணி
எங்களை அழைக்கிறது.

கவிஞனே
தள்ளிச் செல்.
உன் கவிதை
எங்கள்
காயங்களை ஆற்றாது...."

- கமலநாதன்
.

எழுதியவர் : கமலநாதன் (13-Nov-22, 9:04 am)
சேர்த்தது : Kamalanathan S
பார்வை : 94

மேலே