உள்ளத்தில் ஓவியம் கள்ளவிழியால் காதல்

உள்ளத்தின் உள்ளேநீ ஓவியம் தீட்டுகிறாய்
கள்ளவிழி யால்காதல் மென்மொழி பேசுகிறாய்
சொல்லை உடைத்துச்சீர் வெண்பா வினைத்தரவோ
கல்லை உடைத்துச் சிலையாக்கித் தந்திடவோ
மெல்லிடை மேனகைநீ சொல்
உள்ளத்தின் உள்ளேநீ ஓவியம் தீட்டுகிறாய்
கள்ளவிழி யால்காதல் மென்மொழி பேசுகிறாய்
கல்லை உடைத்துச் சிலையாக்கித் தந்திடவோ
மெல்லிடை மேனகைநீ சொல்
உள்ளத்தின் உள்ளேநீ ஓவியம் தீட்டுகிறாய்
கள்ளவிழி யால்காதல் பேசுகிறாய் --வெள்ளைநல்
கல்லை உடைத்துச் சிலையாக்கித் தந்திடவோ
மெல்லிடை மேனகைநீ சொல்
உள்ளத்தின் உள்ளேநீ ஓவியம் தீட்டுகிறாய்
கள்ளவிழி யால்காதல் மென்மொழி பேசுகிறாய்
வெள்ளை நிறமென்பூ வே
உள்ளத்தில் ஓவியம் கள்ளவிழி யால்காதல்
அள்ளித் தருவாய்எல் லாம்
---வெண்பா பல வடிவில்