இதயம்
உன் மனக்கதவின்
வாசலில்
இதயம் வாடகைக்கு
அறிவிப்பு
நான்கு சிறிய
அறைகள்
ஆயினும்
இரத்தநாளமாய்
சுவர்கள்
மிகவும் பிடித்திருந்தது
எழுபத்திரண்டு
முறை துடிக்கும்
கடிகாரம் மட்டுமே
இருந்தது அதனுள்
அறையெங்கும்
சுழலும் உன் மூச்சு
மின்விசிறியாய்
நீ அருந்தும்
தண்ணீர்
சிந்தும் மழையாய்
இரவும் பகலும்
இங்கில்லை
என்றபோதும்
நான் பார்க்கும்
வானமாய்
இருக்கின்றன
உன் கண்கள்...