உன் அருள் வேண்டுமே
இறைவா....!
எதையெல்லாம்
கொடுத்தாயோ அதற்காக நன்றி.
எதையெல்லாம்
கொடுக்கலையோ அதற்காகவும் நன்றி.
நீ ...
கொடுத்ததினால் நான் வளர்ந்தேன்.
நீ...
கொடுக்காததினால் நான் தளர்ந்தேன்
தப்பித்தேன்.
உன்னால் கொடுக்கத்தான் முடியும்.
என்னால் பெறத்தான் முடியும்.
உனக்கு என்னதான் திருப்பித் தருவது?
என் உடல்...பொருள்...ஆவி....
அத்தனையையும்தான் கொடுக்க முடியும்.
அதுவும் நீ கொடுத்ததுதான்.
கொடுத்தபோது இருந்ததுபோல்
கள்ளம்கபடமில்லாமல்
கறைகள் ஏதுமில்லாமல்...
குறைகள் கிஞ்சித்துமில்லாமல்
திருப்பித் தர முயற்சிக்கிறேன்.
அந்த முயற்சியும்
தடையின்றி வெற்றிபெற
உன் அருள் வேண்டுமே...!