இன்னும் என்ன தூக்கம்

இன்னும் என்னதான் உறக்கமடா
வந்துவிடும் வாழ்வில் சுனக்கமடா
முன்னேற்ற வாழ்வை தடுக்குமடா
கண்முன் கடமைகள் இருக்குதடா

விழித்திருந்தோர் முன்னேறி சென்றுவிட்டார்
படுத்திருந்தோர் பின்தங்கி
நின்றுவிட்டார்
தாமதாமாய் எழுந்திருக்க
நினைக்காதே
காலம் கடந்து விட்டதாய்
மலைக்காதே

இனிமேலும் இருக்கு எதிர்காலம்
விரைந்து முன்னேறு வருங்காலம்
கற்றுத் தேர்ந்திடு அது பொற்காலம்
அதற்காக உழைத்திடு சிலகாலம்

உயர்த்திடு உன்னத வளர்ச்சியை
அடைந்திடு சிகரத்தின் உச்சியை
நம்பிக்கையுடன் நாளும் உழைத்து
நாளை நமதென கைகளை உயர்த்து

அறந்தை ரவிராஜன்

எழுதியவர் : ரவிராஜன் (14-Nov-22, 9:55 pm)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : innum yenna thookam
பார்வை : 264

மேலே