காதல் யாத்திரை

முதலில்
நிலாவில் கால் வைத்து ஆம்ஸ்ட்ராங்கா இல்லை
பிரசவம் பார்த்த
டாக்டர் மகாலட்சுமியா
இல்லை
யார் தெரியுமா
அவர்தான் உன்னை
குழந்தையில்
குளிப்ப பாட்டிய
ஆயா அஞ்சலை

அன்னை தெரசாவிற்கும் உன் அன்னை சரோசாவிற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா
அன்னை தெரசா காச நோயை தடுக்க காரணமாக இருந்தவர்
உன் அன்னை சரோசா இளைஞர்களுக்கு காதல் நோயை கொடுக்க காரணமாக இருந்தவர்



தேவதைகளுக்கெல்லாம்
இந்திரன் மேல் கடும் கோபம்
ஏன் தெரியுமா
உன் பாட்டி கடந்த வாரம் இறந்து மேல் லோகம் செல்லும்போது
அவரைப் பார்த்த இந்திரன் தேவதைகளே இவர் பாட்டி அல்ல உங்களை விட செம பியூட்டி என்று சொல்லிவிட்டார்

உன் வீட்டில்
மீன் குழம்பு வைப்பதே
இல்லை
ஏன் தெரியுமா
மீன் குழம்பு வைத்தால்
நீ குருடாகி விடுவாய்

உன் தந்தை
பல வருடமாய் சிறையில் இருக்கிறார்
ஏன் தெரியுமா
உன்னை போல் அழகிய மயிலை வீட்டில் வளர்த்த குற்றத்திற்காக

உன் தாய் அமெரிக்காவில் இருக்கிறார்
ஏன் தெரியுமா
எப்படி இப்படி ஒரு அழகிய
பெண்ணை படைத்தார்கள் என்று நாசா விஞ்ஞானிகள் அவரிடம் விசாரணை செய்து கொண்டிருக்கிறது.

மண்ணை விலக்கி விதை விண்ணோக்கி வருவது
ஏன் தெரியுமா
உன் கலைமுகம் காணவே


உன் கை பட்ட விதைதான் கவிதையாய் முளைக்கிறது மண்ணில்
இறைவா எப்படி இப்படி
ஒரு நிறத்தை படைத்தாய் இப்பெண்ணில்


உனக்கும் கலைஞருக்கும்
என்ன வித்தியாசம் தெரியுமா
கலைஞர் திமுக தலைவரை அண்ணா என்று அழைத்து மக்களிடம் நெருப்பேற்றிக் கொண்டிருந்தார்
நீயோ என்னை அண்ணா என்று அழைத்து வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறாய்

உண்மையில் திமுகவின் தலைவன் நான்தான்
திமுக என்றால்
திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல
திவ்யா முன்னேற்ற கழகம்

நீ கனக வள்ளி அல்ல
என் காதல் நோய்க்கு
மருந்திடும் கற்பூரவல்லி

ஐஸ்வர்யாராய் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
ஏன் தெரியுமா
நீ உலக அழகி போட்டிக்கு போகாமல் உன் பாட்டிக்கு உடம்பு சரியில்லை என்று அவரைப் பார்க்க போய்விட்டாய்


சாதாரண பச்சை இலை பச்சிலையானது
ஏன் தெரியுமா
அந்தப் பச்சை இலையில்
உன் கை பட்டு விட்டது

மான் வேட்டைக்கு சென்று கொண்டிருந்த வேடர்கள் அனைவரும் இப்பொழுது வள்ளலார் சபையில் தலைவர்கள் செயலாளர்கள் என பொறுப்பிற்கு வந்து விட்டனர்
ஏன் தெரியுமா
உன்னை வழியில் கண்டார்கள் உன் இனத்தை அழிக்க அவர்கள் விரும்பவில்லை

தமிழுக்காக என் உயிரைக் கொடுப்பேன் என்று கேரளத்து கன்னடத்து இளைஞர்கள் அனைவரும் சபதம் இடுகின்றனர் ஏன் தெரியுமா
உன் பெயர் தமிழ்

மகாபலிபுரத்தை சுற்றிப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும்
உன் வீட்டையும் ஒரு முறை சுற்றிப் பார்க்கின்றனர்.
ஏன் தெரியுமா
நடக்கும் சிலை அங்கே தானே வசிக்கிறது.

கவிஞர் புதுவை குமார்
நிறுவனர்
உலகக் கவிஞர்கள் சங்கமம்
உதவும் இதயம் பேரியக்கம்

எழுதியவர் : Kumar (15-Nov-22, 7:35 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : kaadhal yaaththirai
பார்வை : 172

மேலே