சிட்டு போல

சிட்டு போல...
***** *********
அருகி வரும்
குருவி இனமே
தினமும் உனைத்தேடுது
எனது மனமே
கீச்சிட்டு பறப்பது
உனது குணமே
பார்த்ததும் மறக்குது
எனது சினமே
பொய்யாக பலர் வந்துபோவார்
காரணம் பணமே
மெய்யாக நீ வந்தால்
மகிழ்திடுவேன் மறுகணமே


அறந்தை ரவிராஜன்

எழுதியவர் : ரவிராஜன் (17-Nov-22, 6:26 pm)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : sittu pola
பார்வை : 77

மேலே