ஆண்தேவதை - 1

ஆண்தேவதை - 1

ஆண்கள் தினம் மட்டும் அல்ல சிறப்பான எல்லாவற்றிற்கும் ஏன் தினம் நிர்ணயிக்கிறார்கள்
.. இதை இன்னொருநாள் பார்த்துக் கொள்ளலாம்

நம் வாழ்க்கை சராசரியாக நூறு வருடக்காலம் ஆயுளுடையது

அதில்

ஒரு பெண் சராசரியாக பிறந்தது முதல் வளர்ந்ததுவரை தந்தை தமையன் என யாரோ ஆண் நிழலிலேயே இருந்துவிடுகிறாள் .. எத்தனை அப்பாக்கள் எத்தனை தமையன்கள் இவர்களை இவர்களாய் உயிர்ப்புடன் வைக்கிறார்கள் ?

வாழ்க்கையின் கால் பகுதிக்குப் பின்பு
ஒருவனிடம் மனதையும் அவள் சகலத்தையும் ஒப்படைக்கிறாள்.. மீதமிருக்கும் அவளுடைய முக்கால் பகுதி வாழ்க்கை அந்த யாரோ அறிமுக மில்லாதவனிடமிருந்து துவங்குகிறது .(Her expectations, nevertheless or notwithstanding starts from there that, let husbands them do with their own understand. ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே அவளுக்குள் bore என்னும்
ஆங்கில வார்த்தையை நுழைக்காதவாறு ஒரு ஆடவன் அவளிடம் தன் இருப்பிடத்தை
தக்கவைத்திருப்பானானால் .. அவனுக்கு இந்த வாழ்த்து சேரட்டும்

என்‌போல் ஒருவனுக்கான வாழ்த்து..

1. சகலை

சகலைன்னாலே ரகளைன்னு ஆயிட்ட காலத்தில் இவன்

எங்கிருந்து வந்தான்

மனைவி சொல்கிறாள்
ஒரே இடத்தில் வேலை செய்கிறார்கள் அவங்க வீட்ல இருந்து வந்து கேட்டாங்க நான் உங்ககிட்ட பேசிட்டு
சொல்றேன்னு சொல்லிட்டேன் என ..

மறுநாள் காலை சாப்பாட்டு முறை.. மச்சினி எனும் என்‌
வளர்ப்பு மகள் வந்தாள் சாப்பிடும்போது கேட்டேன்

காதலா ? என

ஒப்புக்கொண்டாள்

அவங்கப்பா அம்மாவை வரசொல்லி பேசிட்டோம்

அவன் அவ்வளவு பணக்காரன் இல்லை ஆனால் அவனிடம் பணம் தங்கும் ராசி இருந்தது.பணிவிருந்தது சொல்லும் சொற்களில் நேர்மை‌ மிளிர்ந்தது.
எதார்த்தம் தெரிபட்டது. நாம் சொல்வதை பொறுமையுடன் கேட்கும் தன்மை இருந்தது..
எதையும் எதிர்ப்பார்க்காத தன்மை
இருந்தது .. எனக்கும் அவனுக்குமான
இணக்கம் மேலும் அதிகமாய் இருந்தது .

ஒருநாள்
வேலையிலிருந்து நிற்கிறேன் அண்ணா என்றான்

ஏதும் கேட்கவில்லை. So next என்றேன்.. ஆட்டோ ஓட்டலாம்னு இருக்கேன்னு சொன்னான்
அவனைச் சார்ந்த யாருக்கும் அது பிடிக்கவில்லை .. ஆனால் அவனிடம் என் ஒப்புதலைக் கொடுத்து விட்டிருந்தேன்

எனக்குத் தெரியும்

அவன் எதிலும் சரி எல்லாத்திலும் சரி எச்சூழலிலும்
யாரையும் ஏமாற்றமாட்டான் என நன்றாகவேத் தெரியும்.

ஒரு குடும்பம் இப்படித்தான் இருக்கவேண்டும். ஒரு ஆண் இப்படித்தான் இருக்கவேண்டும் ல். ஒரு சிறந்த ஆணின் நன்னடத்தை இப்படித்தான் இருக்கவேண்டும். என்பதை அவன் அடுத்தடுத்த செய்கைகளால், அணுகுமுறையால் சொல்லிக் கொண்டே இருந்தான்
இன்னும் இருக்கிறான் மனைவி மக்களை மதிக்கிறான்
பிறருடைய கோபத்தை பக்குவமாக கையாளும் திறன்
தெரிந்திருக்கிறான்.

அன்றொருப் பதிவில் சொல்லிருப்பேன்
இந்த வாழ்க்கையை அழகாய் வாழ்ந்து செல்ல அதிக பணமும் மிஞ்சிய மெனக்கெடல்களும் அவசியப் படுவதாய் இல்லை சாதாரணமாய் நம் எதார்த்தங்களோடு நம் கடமை பொறுப்புகளோடு
வாழும் வாழ்க்கையே அழகானதுதான் ஒரு வாரத்திற்கு ஒரு வீக்கெண்ட் தான் அழகு .. அப்படித்தானே ம்

எதையாவது செய்யவேண்டுமாய் மெனக்கெட்டுக் கொண்டே இருந்தோமானால் ஸ்ட்ரஸ்ஸை வாங்கிக் கொண்டுவிடுவோம் ஏதோ ஒன்றிற்கு மெனக்கெட
வேண்டும் என நினைப்பீர்களானால் அது நம் கடமை பொறுப்புகளுக்காய் இருந்துவிட்டுப் போகட்டும்

இருக்குமிடம் எனத் தெரிந்தும் ஆசைக் கொள்ளாத இதயத்துடன் வாழும் மனம் என்பது எல்லோருக்கும்
அமைந்துவிடுமா என்றால் இல்லைதான்..

இப்படிப் பட்ட மனைவியை அவள் வேலையை அவள் உணர்வுகளை மதிக்கும் இருப்பது போதுமென்ற
நிறைவுடன் இருக்கும் ஆடவன் ஒரு பெண்ணுக்கு
அமைந்தால் யார் வாழ்வுதான் இனிமையில்லாமல் இருக்கும் ..

அப்போ சொன்னேனில்லையா அந்த ஏரியாவில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கான மரியாதை அதுவரை இருந்ததே இல்லை..இவன் வந்த பிறகு அந்த ஏரியா
ஆட்டோ ஓட்டுனர்களுக்கான மரியாதையைப்
பெற்றுத் தந்திருந்தான் அவன் நன்னடத்தையால் ..

வாடகை வீடு அளவான வருமானம் இரு ஆண் குழந்தைகள் (ஸ்கூல் போறாங்க .. போறவரை வளர்த்தும் கொடுத்துவிட்டாள் மனைவி). என் அம்மாவும் மாமியாரும் எங்களுடன் தான் இருக்கிறார்கள், அவளுடைய குழந்தைகளைப் போலவே அவளும் ஒரு மகள்.

அடுதத ஆண் - பிஷ்வா ரஞ்சன் (Learned Honesty, Responsibility and Role of Leadership/Ownership undertaking) (ஒடிசாவை சேர்ந்தவன்.. Larsen and Tubro Chiyoda Division (It's an enormous public equity) இல் என்னுடன் என்‌ டீமில் பணியாற்றியவன் .. (இவனைச் சொல்லி முடியும் போது..இன்னொருவன் இருப்பான்.. இப்படி ஒவ்வொருவர்கள் மக்கள் வெள்ளத்துடன் கலந்து சாதாரணமாக வாழ்ந்து போவார்கள்)

பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராக (20-Nov-22, 3:09 am)
பார்வை : 68

மேலே