வீட்டுக்குரிய பொருளை வினவலே செவிப்பயனாம் – அறநெறிச்சாரம் 197
நேரிசை வெண்பா
பண்ணமை யாழ்குழல் கீதமென் றின்னவை
நண்ணி நயப்ப செவியல்ல - திண்ணிதின்
வெட்டெனச் சொன்னீக்கி விண்ணின்பம் வீட்டொடு
கட்டுரை கேட்ப செவி 197
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
இசையொடு பொருந்திய யாழ் குழல் இசைப்பாட்டு என்பவற்றை அவை நிகழுமிடங்களை யடைந்து விரும்பிக் கேட்பன செவிகளாகா; உறுதியொடு பிறர் கூறுங் கடுஞ் சொற்களைக் கேளாது துறக்க இன்பத்தினையும் வீடுபேற்றையும் பயக்கும் உறுதிமொழிகளைக் கேட்பனவே செவிகளாகும்.
குறிப்பு:
இயற்கையிற் செவிக் கின்பஞ் செய்யும் யாழ் குழல் பாட்டு இவற்றால் மகிழ்வுறும் செவி செவியல்ல.