உங்களுக்காக ஒரு கடிதம் 34

ஹலோ ...தோழர்களே...
இன்று.... இன்றைய மருத்துவ தலைமுறையினரை பற்றி எழுதலாமென்று இதோ எழுதிக்கொண்டிருக்கிறேன். மருத்துவம் ஓ...ஒரு மகத்துவம். " NOBLE PROFESSION ". ஒத்துக்கொள்கிறேன். என்னை பொறுத்தவரை அது எங்கோ அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கிறதே.இது என் சொந்த கருத்து. தவறாக இருந்தால் என்னை மன்னித்து இந்த கடிதத்தை புறம் தள்ளிவிடுங்கள். ஆனால் என் மனதில் தோன்றுவதை...என் அடிமனதை அரித்துக்கொண்டிருக்கும் எதார்த்தத்தை பதிவிட துணிகிறேன். என் விவாதம் சரியாக இருந்தால் என்னை ஆதரியுங்கள். இல்லையில்லை எதார்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள். புரிந்துகொள்ளவாவது முயற்சி செய்யுங்கள்.
ஒரே அடியாக குறை சொல்லிவிட முடியாது. பெரும்பாலான சதவிகிதம் செய்கின்ற தன்னலமற்ற தொண்டுகள்தான்...இன்னமும் Noblenessஐ தாங்கிக்கொண்டிருக்கிறது. சிறுபான்மை சதவிகிதத்தார் செய்யும் சில தவறுகள்... அலட்சியங்கள்தான் இத்தனைக்கும் காரணம். அது என்னவென்று இனி பார்க்கலாம். பள்ளிப்பருவத்தில் யாரை கேட்டாலும் பெரும்பாலானவர்களின் கனவு...ஆசை...லட்சியம் டாக்டர் ஆவது. இந்த பதில் தானாகவே...இயல்பாய்...யதார்த்தமாய் வந்து விழும். ஆக அந்த பிஞ்சு மனதிலேயே தெரிந்தோ தெரியாமலே விதை ஊன்றப்பட்டு...வளர வளர அதுவும் கூடவே வளர்ந்து ஆல விருக்ஷமாய் வேர் விட்டு...கிளைவிட்டு...விழுதுகள் விட்டு வலுவாய் நிறுத்தப்பட்டு இருக்கிறதே ஒவ்வொரு குழந்தைகளிடமும். ஆனால் இன்றோ குழந்தை பிறந்தவுடன் ஒரு சக்கர வியூகம் இட்டு...அந்த பிஞ்சு மனதில் நீ...டாக்டர் ..... நீ டாக்டர் என்று அவன் பேரை காதில் ஊதினார்களோ என்னவோ டாக்டரை ஓதி வேப்பிலை அடித்துவிடுகிறார்கள்.
அவனோ இல்லை அவளோ வளரும்போது அவர்கள் எண்ணம் கனவு லட்ச்சியம் மாறலாம் அல்லவா? ஆனால் அதைப் பற்றி
யாருக்கு இங்கென்ன கவலை? நீ டாக்டர் ஆக வேண்டும் அவ்வளவுதான்.
அதற்காக பெற்றோர்கள் எந்த எல்லைக்கும் போக தாயாராக இருக்கிறார்கள். ஏன்? தயார் படுத்திக்கொள்கிறார்கள். கொடுமைதான். ஆனால் அது எத்தனை உண்மையென்று நம் எல்லோருக்கும் தெரியும். அதற்காக
அவர்கள் செய்யும் காரியங்களை பட்டியல் இட்டால் இந்த கடிதம் பத்தாது..இன்னும் ஆயிரம் கடிதங்கள் எழுத வேண்டிவரும்.
சிலவற்றை ஒவ்வொன்றாய் பார்ப்போம். நல்ல ஸ்கூல் இல்லையில்லை நாட்டின் டாப் ஸ்கூலில் அட்மிசன் வாங்க நட்ட நடுராத்திரியில் ஸ்கூல் காம்பவுண்ட் ஓரமாய்...நடு ரோட்டில் அனுமார்வால் போன்று நீண்ட நெடு வரிசையில் துண்டு போட்டு காத்திருக்கும் எத்தனை பெற்றோர்களை பார்த்திருக்கிறோம். நோட்டு கட்டை எண்ணாமல் நன்கொடையாய் வாரிவாரி வழங்கும் கர்ண சக்கரவர்த்தியாய் ... கடை ஏழு வள்ளல்களாய் மாறிப்போய்விடும் ஒரு கூட்டம்
நாம் அறியாததா? அப்புறம் என்ன? குழந்தைகள் கேட்பாதையெல்லாம் வாங்கிக்கொடுத்து....என்னென்ன வசதிகள் வேண்டுமோ அத்தனையும் செய்துகொடுத்து...படி...படி...என்று அவர்களை காலத்தின்... சூழ்நிலைக் கைதியாய்....கண் கொத்திப்பாம்பாய்....செங்கழுக்காய் நோட்டமிட்டு, அவர்களின் சுதந்தரத்தை பிடுங்கி... விலங்கிட்டு...அடிமையாய் வைத்திருக்கும் பரிதாப நிலை தெரியாததா என்ன? மார்க்....மார்க்...சென்டம்.சென்டம்...599 / 600 அந்த ஒரு மார்க்கும் ஏன் குறைந்தது என்று குறைபட்டுக்கொள்ளும் தாய்தந்தையரைத்தான் நாம் தினம் தினம் பார்க்கின்றோமே...!
பசங்களும் கஷ்டப்பட்டு...புரிந்ததோ புரியலையோ... மக்கப் செய்ததை பரிட்ச்சையில் வாந்தியெடுத்து... டாப் லிஸ்டில் முண்டியடித்து வந்து அப்புறம் " நீட்" என்கிற கொடிய மாரத்தான் ரேஸில் கண்முடித்தனமாய் ஓடி எப்படியோ பெற்றோரின் கனவினை...ஆசையை...லட்சியத்தை பூர்த்திசெய்து மெடிக்கல் காலேஜில்
அடியெடுத்து வைக்கும் இந்த இளைய தலைமுறையினரைப் பற்றித்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். இனிமேதான் இந்த காளியின் ஆட்டத்தை பார்க்கப் போறீங்க...என கல்லூரி கேட்டை திறந்து கால் பதிக்கிறார்களே... பிறகு...
தொடரும்..

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (21-Nov-22, 9:05 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 72

சிறந்த கட்டுரைகள்

மேலே