சிந்தனை
“சிந்தனை” தன்னை
தேடி தேடி
தெளியும் அதிகாலை வேளை.
புத்தம் புதிதாய்
உலகம் பளிச்சிட,
வண்ண வண்ண
பிம்பங்கள் மயக்கம் காட்டும்.
தூர தெரியும் விண்மீனையும்
மின்மினியாய்
தொட்டு விட தோன்றுதே.
வாழும் நாட்கள் சிறு புள்ளிகள்
நோக்கி நகரும் ஊர்தியாய் நாம்
சிறு தடைகள், பல கண்ணீர் நிமிடங்கள்
தேடி திரியும் வெளிச்சங்கள்
மறைக்கப்பட்ட கோபங்கள்
வெளிபடித்தாத பிறழ்ச்சிகள்
நெருங்கி நிற்கும் குழிகள்
தெரிந்தும் சிரிக்கும் மனங்கள்
தூய அன்பின் அற்புதங்கள்
ஒதுங்கி நிற்கும் தலைகள்
தயங்கி நிற்க்கும் கோழைகள்
துணிந்து அடிக்கும் வீரங்கள்
வேதனை துளிகள் சிதறும் நம்பிக்கையில்
சிறு புள்ளியை தேடி
பயணம் செய்கிறேன்.