அனுமதி

இங்கே பிறந்தவுடன் குதித்து ஓடும்
மனமே அதிகம்.
தவழ, சுவர் பிடித்து நடக்க
தவறி விழ, தவறு செய்ய
அனுமதி கொடு.
அறுபதில் உச்சம் தொட்டவனும் இங்குண்டு.
மானை போல பாய்ந்து ஓட
வாழும் மனங்கள் எண்ணம் கொண்டால்
ஓரினம் மட்டுமே உலகை ஆளும்..
இங்கு ஆமையும் உண்டு.
அசைந்து செல்ல
உரிமையும் உண்டு.

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 1:39 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : anumathi
பார்வை : 164

மேலே