பிரிவு

தாயின் மடியிலிருந்து
தரை தாவுவதொரு பிரிவு

தொட்டிலின் ஆட்டத்திலிருந்து
ஊஞ்சலுக்கு மாறுவதொரு பிரிவு

தவழும் கால்களை மாற்றி
தத்தி நடப்பதொரு பிரிவு

கடிக்கா ஈறுகளிலிருந்து
அரைக்கும் பற்களும் பிரிவு

குழந்தை பருவத்திலிருந்து
இளமை பருவமொரு பிரிவு

வீட்டின் சூழலை விட்டு
பள்ளி செல்வதொரு பிரிவு

பள்ளியின் இன்பத்தை விட்டு
கல்லூரி செல்வதொரு பிரிவு

இளமை பருவத்திலிருந்து
முதுமை பருவமொரு பிரிவு

உடலை விட்டு உயிர்
செல்வது பெரும் பிரிவு



எழுதியவர் : த. நாகலிங்கம் (10-Oct-11, 2:03 pm)
Tanglish : pirivu
பார்வை : 315

மேலே