ஒரே மனம்... ஒரே குணம்...
யாரிந்த மானிடனை
மரண விளிம்பில் தள்ளியது?
மனம் என்னும் மாயாவி
தினம் வந்து அழைத்தானோ
கனநேரம் சிந்தித்து
வாட்டி வதிக்கி சென்றானோ
ஊன புத்தி கொண்டதினால்
ஈனச்செயல் புரிந்தானோ
கானகத்து கொடுவிலங்காய்
வருத்தி வருத்தி சென்றானோ
மனம் என்பது குரங்கல்ல
அது மானிடத்தின் எமனாகும்
மனம் தானே தீயவனை
நற்குணத்தை அழிக்கிறதே
ஒரே மனம் ஒரே குணம்
வேண்டுமைய்யா என் இறைவா
ஊனமணம் ஒழித்தருளி
வழி செய்வாய் என் குருவே
ஈனச்செயல் புரியாமல்
இன்பமுற அருள் தருவாய்.