ரசனைகள்

வாழ்வின் ரசனைகள்
பலவிதம், ஒவ்வொன்றும்
தந்திடும் புது இதம்

ஆரம்பத்திற்கு முன் ரசித்தால்
ஆவல்கள் - அது
இளமையின் கனவுகள்
முடிந்த பின் ரசித்தால்
ஏக்கங்கள் - அதிலும்
இனிமை காண்பவர்கள்
மனிதர்கள்
வாழும்போதே ரசித்தால்
வசந்தங்கள் - அதுதான்
வாழ்ந்ததற்கான அர்த்தங்கள்
இறந்தும் ரசிக்க வைப்பது
முயற்சிகள் - அதை
செய்து முடித்தோர்கள்
அறிஞர்கள்....


எழுதியவர் : த. நாகலிங்கம் (10-Oct-11, 2:35 pm)
Tanglish : rasanaigal
பார்வை : 255

மேலே