இடைவெளி

திருப்பம் இல்லா பாதையில்
ஓடி பயன் என்ன?
வளைவில் தான் வாழ்வின்
ரகசியமே மறைந்திருக்கும்.
மேடு பள்ளங்கள்
நிதானம் கற்றுதரும்.
விழுந்து எழும் தழும்புகள்
வலியின் கண்ணீர் துளிகள்
வேதனையின் எரிச்சல்கள்
சில பாடம் சொல்லி தரும்.
இடைவெளி அவசியம்
வழியிலும்
வாழ்விலும்.

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 9:50 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : idaiveli
பார்வை : 288

மேலே