நீ நீயாய் இரு

நீ நீயாய் இரு...!

நிலவிலும் களங்கம் தேடும்
நெஞ்சங்கள் வாழும் உலகமிது...
வாழ்ந்தாலும் ஏசும்
தாழ்ந்தாலும் ஏசும்...
உன் ஒவ்வொரு அசைவுக்கும்
பழி சொல்லிச் செல்லும்
பாவம் வழி சொல்லத் தெரியாது...
நிஜங்களை தேடித் தேடி
நெஞ்சுரம் இழக்காதே
நீ நீயாய் இரு...!

எழுதியவர் : Parveen (24-Nov-22, 4:31 pm)
சேர்த்தது : Parveen
பார்வை : 2014

மேலே