புன்னகை
மங்கை அவள்
விழி பட்டு
மாதவம்
முடிந்ததென,
முந்தானை
சிறை நீக்கி
முடியுமென
முயன்றபோது!
உதடுகள்
முணுமுணுக்கும்
கடுஞ்சொல்லை
எரிந்து விட்டாள்,
உள்ளம் காதல்
உணராமல்
உறங்கி தான்
போய்விடும்.
காதலுடன்
கவி எழுத
கலை மணிகள்
உள்ளபோது,
சொல்லுக்கு
உயிர் கொடுத்து
சில வரிகள்
எழுந்தபோது,
கானல் என காதல்
கலை மறைந்து
போனது என்ன!
கரும் மேகம்
சூழ்ந்து இருந்தும்;
கவி நடைகள்
நிறைந்து இருந்தும்;
இயற்கை
மலர்ந்து இருந்தும்;
இன்னிசை
தொட்டிருந்தும்;
காதலின்றி
கவிபாட
கவிஞர்களே
இல்லையம்மா!