தென்றிசை நோக்கியே தெய்வமுந் தொழுதாள் - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(கூவிளம் + விளம் + விளம் + மா)
அன்பினைச் சொல்லினன் அவளிடம் இனிதாய்;
இன்புற மகிழ்ந்தனள் இதனையே கிளர்ந்து;
துன்பிலை என்றவள் துணிவுடன் நினைந்து
தென்றிசை நோக்கியே தெய்வமுந் தொழுதாள்! 1
கலிவிருத்தம்
(கருவிளம் + விளம் + விளம் + மா)
வளமுடன் இன்புறும் வாழ்வுமே இனிதாய்;
இளகிய மனமுமே இன்பமும் அளிக்கும்!
அளவுகோல் உண்டுமோ அதனையே அறிய;
இளங்கிளை தாங்கிடல் இசைவென வளர்க்கும்! 2
– வ.க.கன்னியப்பன்