தமிழ்த்தாய்

வளர்ந்துவிட்டேன் என்று
சொல்லும் போதெல்லாம்
தலையில் குட்டி
நிமிர்ந்து பாரடா கண்மணி
எதற்கடா திருப்தி உனக்கு?
சொட்டு நீரை அள்ளிவிட்டால்
கடல் சொந்தமாகி விடுமா?
தொட்டு விட்டால்
சிலை வடிந்து விடுமா?
கேளடா கண்மணி
என்றும் குழந்தை நீ எனக்கு.
உனக்கு முன்பு பிறந்து
அம்மா என்று ஆராதனை
செய்தவர்கள் கோடி.
தலை நிமிர்ந்து கனம் செய்.
தலைகனம் கொள்ளாதே.

எழுதியவர் : நிலவன் (26-Nov-22, 7:51 pm)
சேர்த்தது : நிலவன்
பார்வை : 23

மேலே