முறையோ

படித்து பட்டம் பெற்று
பதவிக்கு வந்தவர்கள்
பண்பாட்டை இழந்து
ஊழலுக்கும்,
உரிமை இல்லா பொருளுக்கும்
ஆசை பட்டு அபகரிக்க நினைப்பது
இழி செயல் என எண்ணலையோ !

அற்பன் என அறிந்திருந்தும்
அவனிடம் அதிகாரத்தைக்
கொடுப்பது
குரங்கின் கையில்
கொள்ளிக் கட்டையை
கொடுப்பது போலாகாதோ
கொடுமையல்லவோ !

நேர்மையற்ற மனிதர்கள்
நீதி, நெறியை உதறிவிட்டு
அதிகாரம் செலுத்தும்போது
அனைத்தையும் தனதாக்கி
தங்கள் நலனை மட்டும்
உயர்த்திக் கொள்வது
முறையோ !

எழுதியவர் : கோ. கணபதி. (27-Nov-22, 11:09 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : muraiyo
பார்வை : 55

மேலே