குடி பெயருகிறார்கள்

இந்திய தேசம்
அந்நியனுக்கு
அடிமையான தொரு
காலம்

பகையின்றி
போருமின்றி
விடுதலை பெற்று
சுதந்திர நாடாக
வாழத் தொடங்கியபோது

நிலத்தை பறித்து
நாட்டு மக்களை
அடிமையாக்கி
ஆட்டி படைத்த
கொடியவர்களால்

இந்திய நாடோ
இன்று மீண்டும்
ஒற்றுமையை இழந்து
அத்து மீறும் ஊழலால்
அவதி படுகிறது

பாவம் ஏழை மக்கள்
பசி, பட்டினி இன்றி
சுதந்திரமாக வாழ
குடி பெயருகிறார்கள்
நரகம், சொர்க்கம் தேடி

எழுதியவர் : கோ. கணபதி. (27-Nov-22, 12:01 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 19

மேலே