430 நீளச் சுமக்கும் உடல் நீர்க்குமிழி போல் கெடும் - யாக்கை நிலையாமை 12

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

அனமிகிலோ வாயுகுறை யிற்சூடுண் ணாவிடிலின்
..ஆவி நீங்குங்
கனமான வெய்யின்மழை பனியுதவா தவையின்றேற்
..கணநில் லாது
தினமுமா யிரங்கண்ட மிமைப்போதா கிலுமதன்மேற்
..சிந்தை யின்றேற்
புனன்மொக்கு ளெனவழியு நெஞ்சமே நாஞ்சுமக்கும்
..பூட்சி தானே. 12

- யாக்கை நிலையாமை, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

”மனமே! சோறு கூடினால் வாய்வு நோய் உண்டா கும். குறைந்தால் சூடு ஏற்படும். உண்ணா விட்டால் உயிர் அகலும்.

மிகுதியான வெயில், மழை, பனி உதவாது. அவை இல்லாவிட்டால் நொடிப் பொழு தும் உடல் நிலைக்காது. நாள் தோறும் ஆயிரம் இடர்ப்பாடுகள்.

கண்ணிமைப் பொழுதாகிலும் உடல் மேல் நினைப்பில்லை என்றால் நீர்க்குமிழி போல் அழியும்.

இத்தகைய உடம்பையே நாம் சுமந்து திரிகின்றோம்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

அனம் - சோறு. வாயு - காற்று. ஆவி - உயிர். கண்டம் - இடர்ப்பாடு. பூட்சி - உடல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Nov-22, 2:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

சிறந்த கட்டுரைகள்

மேலே