வாழ்க்கை பயணம் மனிதனின் எண்ணம்

வாழ்க்கை என்பது ஒரு முறை தான் அது வாழ்வது அவரவர் விருப்பம் தான் ஆசைப்பட்டது போல் வாழ முடிவதில்லை அதற்கு கையில் பணம் இல்லை பாட்டன் சொத்து என்று எதுவும் இல்லை கஷ்டப்பட்டு சம்பாதிக்க வேலை கிடைக்கவில்லை வாழ ஒரு வீடு இல்லை என்ன செய்வது என்று தெரியவில்லை படித்த இளைஞரின் கவலைகள் சொல்ல முடிவதில்லை கவலை இல்லாத மனிதன் யாரும் இல்லை அவரவருக்கு என திறமைகள் இருப்பது தெரிவதில்லை அதைக் காட்ட இந்த உலகம் வழி கொடுப்பதில்லை இதற்கு யாரை குறை சொல்வது என்று தெரியவில்லை விலைவாசி குறைய என்ன செய்வது என்று தெரியவில்லை விதி என்று நினைத்தாலும் முடியவில்லை ஒன்றாம் தேதி பிறப்பது தெரிவதில்லை மாதங்கள் வருவதும் போவதும் நிறுத்த முடிவதில்லை கஷ்டத்திற்கு என்ன வழி என்று தெரியவில்லை வாடகை தர முடியவில்லை வாழவே பிடிக்கவில்லை பலபேர் நினைப்பது இதுதான் இன்று மாதம் பிறக்கிறது சம்பளம் வருகிறது அது போகும் இடம் தெரிவதில்லை யார் யாருக்கு கொடுக்க வேண்டும் என்றும் புரியவில்லை பால் முதல் கரண்ட் பில் வரை இன்று விலைவாசி ஏறிவிட்டது மானியம் என்று எதுவும் இல்லை மனித நேயம் என்றும் எதுவுமில்லை என்ன தான் நடக்கிறது என்று தெரியவில்லை யாரை குறை சொல்வது எப்படி நம் வாழ்வது 25 ரூபாய்க்கு விற்ற பால் இன்று ஆறு ரூபாய் விலை ஏறி விட்டது மனிதனின் வாழ்க்கை அப்படியேத்தான் இருக்கிறது விலைவாசியில் மட்டும் மாற்றம் வருகிறது சிலிண்டர் விலை 400 ரூபாய் ஆரம்பித்து இன்று 1080 ரூபாய்க்கு உயர்ந்து விட்டது இதில் மானியம் என்று எதுவும் இல்லை மின்சாரத்தின் விலை உயரும் என்று நினைக்கவில்லை கொரோனாவை கண்டுவிட்டு கடந்து வந்த பாதை இன்னும் மறக்கவில்லை பட்ட துன்பத்திற்கு வழி பிறக்கவில்லை விலைவாசியை உயர்த்த என்ன காரணம் என்று தெரியவில்லை 100 யூனிட் மின்சாரம் இலவசம் யாருக்கும் இல்லை ஆனால் அதற்கு வரும் வரி அதிகம் என்று தெரியவில்லை வாடகை வீட்டில் குடியிருப்பவர் என்ன செய்தார்கள் அவர்களுக்கு எதற்கு வரி வேலை இருந்தால் சம்பளம் கிடைத்தால் விலைவாசி உயர்ந்தால் நமக்கு என்ன நமக்கு தான் வருமானம் வருகிறது நம் வாழலாம் என நினைக்கலாம் வேலை எதுவுமே கிடைப்பதில்லை கிடைக்கும் வேலையில் நாம் நினைக்கும் சம்பளம் கொடுப்பதில்லை கொரோனா என்ற கொடிய அரக்கனிடமிருந்து இப்பொழுது தான் விடுதலை பெற்றோம் என்று நினைக்கிறேன் அதற்குள் விலைவாசி என்று அரக்கன் நம் கழுத்தைப் பிடிக்கிறான் விழுந்த மனிதன் எழுவதற்குள் அவனை மிதிக்கிறார்கள் லாக் டவுன் இப்பொழுது தான் முடிந்தது வெளியில் வர மக்கள் இப்பொழுதுதான் தொடங்கி இருக்கிறார்கள் வேலை பள்ளிகள் அலுவலகங்கள் பஸ்கள் கோயில்கள் என கூட்டம் இல்லாமல் பல இடங்களில் தனியாகவும் தனித்தும் வாழ நம் கற்றுக் கொண்டோம் இப்பொழுது தான் கூட்டமாக வாழ ஆரம்பிக்கிறோம் நம் ஒரு படி ஏறும் பொழுதே பிடித்து நம்மை தள்ளுகிறார்கள் ஒரு மனிதனுக்கு அன்றாட வாழ்க்கை நடத்துவது பெரிய கஷ்டம் நான் மட்டும் இல்லை இன்று பல பேர் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று தெரியும் நினைக்கிறேன் இதை வெளியில் சொல்ல யாருக்கும் முடியவில்லை தலைவிதி என்று சகித்துக் கொண்டு வாழ பழகி விட்டோம் நம்மை வழி நடத்தும் அரசாங்கம் நம்மை வாழ வைக்க வேண்டும் சிறிது காலம் சில ஆண்டுகள் கழித்தாவது விலைவாசியை உயர்த்த வேண்டும் உடனே இப்படி செய்வது மக்களுக்கு வேதனை அளிக்கிறது வேலையும் முழுமையாக செயல்பட ஆரம்பிக்கவில்லை தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும் அதுபோல் ஆரம்பித்த இடத்தில் இருந்துதான் இப்பொழுது வாழ்க்கை திரும்ப ஆரம்பிக்கப் போகிறது வட்டிக்கு வாங்கி வட்டி கட்ட முடியாமல் தவிக்கிறோம் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை தர முடியாமல் இருக்கிறோம் எதைப் பார்த்தாலும் பெட்ரோல் விலை ஏறுகிறது பேசும் செல்போனின் ரீசார்ஜ் எகிர்கிறது ஒரு காலம் தந்தி முறையில் நாம் சந்தித்தோம் இன்று வாட்ஸ் அப்பில் நம் வீடியோ காலிங் என்று பார்த்து ரசிக்கிறோம் இஎம்ஐ என்று வீடு வாங்குகிறோம் அதை கட்டுவதற்குள் ஆட்டோ டேக்கில் விழுகிறோம் என்னடா இப்படி என்று நினைக்க வேண்டாம் என்னை போல் எத்தனை பேர் நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் என் எண்ணங்களை எழுத்தாக சொல்கிறேன்

எழுதியவர் : தாரா (27-Nov-22, 8:42 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 408

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே