காலம் உன் கைகளில்

காலம் உன் கையில் !!
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

காலம் உந்தன் கைகளிலே இருக்கு /
கவலையெலாம் ஓடிப் போகத் துறத்து /

வாழும் வாழ்க்கை உம்முடையப் பொறுப்பு /
தாழும் சூழல் தள்ளிவைத்து நிறுத்து /

யாவும் உம்மில் உள்ளதைநீ உணர்ந்து /
மேவும் நல்ல வெற்றிபெறின் சிறப்பு /

சுற்றம் நட்பும் சுகம்பெறவே விழைந்து /
முற்றும் வாழ்வை அர்ப்பணித்தல் விரும்பு /

பிறப்பும் இறப்பும் ஒருமுறைதான் புரிந்து /
சிறப்பும் சீரும் அடைந்துவிடு மகிழ்ந்து //

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (29-Nov-22, 5:36 pm)
சேர்த்தது : யாதுமறியான்
Tanglish : kaalam un kaikalil
பார்வை : 858

மேலே