தடம் பிறழாது வென்றிடு

உன்னைச் சுற்றிய உலகை
அறிந்திடு/
உன்னத வாழ்வைத் தேடியே
அலைந்திடு/
உண்மையை உரைத்தே எங்கும்
வாழ்ந்திடு/
உழைத்து உண்டிட எப்போதும்
முயன்றிடு/

அடித்துப் பறித்திடும் நோக்கை
மறந்திடு /
அடுத்தவனையும் நல் வழிக்கே
இழுத்திடு/
அடிமைப் பயங்களை மறந்து
வளர்ந்திடு/
அச்சம் தவிர்த்து பிறருக்கு
உதவிடு/

கற்றிடும் பருவத்திலே திறமையாகக்
கற்றிடு/
கற்றவையைக் கொண்டு புதுமைகள்
படைத்திடு/
களவு பொய்களை நெருங்காது
இருந்திடு/
கசப்புண்டு உடலையும் காத்து
மகிழ்ந்திடு/

படிப்படியாய் சிந்தனையில் முன்னேறிச்
சென்றிடு/
பக்குபமாய்ப் பேசியே காரியத்தை
முடித்திடு/
பச்சைக் கிளியாக இறக்கையை
விரித்திடு/
பல அதிசையங்களை அறிந்திடவே
பறந்திடு/

மன்னனாக உலகினை வலம்
வந்திடு/
மடியேந்திய அன்னையைப் பெருமைப்
படுத்திடு/
மண்ணை நேசித்து நாட்டைச்
சுவாசித்திடு/
மற்றவர்களின் துயரத்திலும் பங்கிட
இறங்கிடு/

உள்ளத் தூய்மையோடு உறவையும்
பாராமரித்திடு/
உதவிடும் மனப்பாங்கை மனதில்
பதியமிடு/
உறுதியான இதயத்தோடு போரிடத்
துணிந்திடு/
உந்தன் தடம் பிறழாது வென்றிடு/

(2020) போட்டிக்கு எழுதியவை)

எழுதியவர் : ஆர் எஸ் கலா (3-Dec-22, 7:22 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 79

மேலே