அழுவதிலும் தவறில்லை விழுவதிலும் தவறில்லை

என்னுயிரே நீயும்
கலங்குவதை நிறுத்திடு/
கண்ணீரைத் துடைத்திடு
என்னருகே அமர்ந்திடு/
அழுவதிலும் தவறில்லை
விழுவதிலும் தவறில்லை /
இரண்டிலும் இருந்து
மெதுவாக மீண்டிடு/
எதனால் எங்கு
தவறினோமென சிந்தித்திடு/
தவறினைத் திருத்தி
வெற்றியைக் கைவசமாக்கிடு/
விழிகள் கொட்டிய
துளிகளை உரமாக்கிடு/
இறந்து கொண்டிருக்கும்
நம்பிக்கையை வளர்த்திடு/
அழுமூஞ்சி என்னும்
சொற்றொடரை மாற்றிடு/
ஏளனமாக நோக்கியவர்
முன்னிலே நிமிர்ந்திடு/