வெல்லும் தோல்விகளைக் கொல்
வெல்லும் தோல்விகளைக் கொல்...
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மதியுடமையும் வலியுடமையும்
துணிவுடமையும்
சுகபோகப் போர்வைக்குள் பூகுந்து
சுகித்திருக்கும் வேளைகளிலேயே ,
முயலாமையும் இயலாமையும்
துணியாமையின் தோளேறித்
தொடர்ந்து ஓடித் தோல்வி இலக்கினைத்
தொட்டுவிடுகின்றன !
புத்தம்புது வெற்றிகளுக்காக மட்டுமல்ல
பெற்ற வெற்றிகளைத் தக்கவைக்கவும்
தொடர்ந்து
விழித்திருந்து வினையாற்றுவோம் !!
-யாதுமறியான்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
