சிவசிவ போற்றி போற்றி..
எப்போதெல்லாம் அவன்
திருவடியை நான்
சரணடைகிறேனோ அப்போதெல்லாம்
மறைந்து போகும்
என் வலியும் கஷ்டமும்
ஏனோ என்னை இப்படி
படைத்து விட்டாய்
என்று நினைத்தது உண்டு..
அவன் கல்லானாலும் கடவுள்
என நிரூபித்ததும் உண்டு..
என் அப்பன் ஈசன்
சிவ சிவ போற்றி போற்றி..