பெண் என்பவள்

பிறந்த இடத்தில்
பிறப்புரிமையை
பேசுபவள்தான்

புகுந்த இடத்தில்
புழுவைப்போல
சுருண்டு கிடக்கிறாள்
பல நேரங்களில் - காரணம்

அவளின் அறியாமையா ? - இல்லை
அவளின் இயலாமையா ? - இல்லை

சகிப்புத்தன்மை என்ற
சிறைக்குள் தன்னை
சூழ்நிலை கைதியாக்கி
தனக்கென்று ஒரு சட்டத்தை
ஏற்படுத்தி வாழ்பவளே பெண்என்பவள்.......

எழுதியவர் : இராசு (4-Dec-22, 5:16 am)
சேர்த்தது : இராசு
Tanglish : pen enpaval
பார்வை : 107

மேலே