கடமை அறிவோம்
கடமையென்ன ஏதென்று மனிதர்நாம் அறியாஆ
மடமைதனில் மூழ்கி மதிமயங்கி தெளியாஆ
கடமையிதுதான் அதுதானென்று ஆளாளுக்கு அளவறியாஆ
பொய்மைகளை கதையளப்பார்தம் லாபத்திற்கு.
கடமையதும் ஆளாளுக்கு வேறுபடும் மாந்தர்க்கு
உடமையென்றும் உரிமையென்றும் நம்மனம் மாற்றி
பொறாமையைத் தூண்டி புத்தியிழக்கச் செய்து
பொறுமையுந்தானிழக்க வந்துசேரும் பேரழிவு.
புதுமைகள்பல செய்வோம் பொல்லாதவைபல ஒழிய
புத்துலகம் பிறந்திட நல்வழிகள்பல கண்டு
புத்தகங்கள்பல எழுதுவோம் இளையோர்க்கு நவின்றிட
புத்தியுந்தெளியும் புதுமணம் வீசுகவே.