என்றும் என்னை தொடரும் உன் நினைவுகள் 555

***என்றும் என்னை தொடரும் உன் நினைவுகள் 555 ***


உயிரானவளே...


மழலை பருவம்
முதல் இன்றுவரை...

நான்
நிலவை ரசித்ததுண்டு...

இரவின் தனிமையில்
அத்தனை சுகம் எனக்கு...

நான் எங்கு சென்றாலும்
நிலவும் என்னுடனே வரும்...

இன்
று என்னை தொடரும்
உன் நினைவுகளை போல...

மாதம் ஒருமுறை
நிலவு வராமல் செல்லும்...

அந்த நாளில் எதையோ
பறிகொடுத்தது போல உணர்வு...

ஒருநாளாவது உன் நினைவுகள்
என்னை
தொடராமல் இருக்குமா...

எல்லாம் மறந்து ஒருநாள்
நான் நானாக வேண்டும்...

சில நேரத்தில் உன் வெறுப்பான
பார்வைகள் வீசுவாய்...

இன்று விருப்பமும் இல்லை
வெறுப்பும் இல்லை...

ஏனோ தொலைவில்
தூரமாக நீ...

தனிமையில்
வெறுமையாக நான்.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (6-Dec-22, 5:43 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 277

மேலே