நான் சேர்த்து வைத்த உன் நினைவுகள் 555

***நான் சேர்த்து வைத்த உன் நினைவுகள் 555 ***


என்னுயிரே...


அணையை திறந்துவிட்டால்
தேக்கி வைத்த வெள்ளம்...

நதியோரம் இருக்கும் நாணல்களை
தழுவிக்கொண்டே செல்லும்...


எனக்குள் சேர்த்து வைத்த
உன் நினைவுகள்...

தினம் தினம் வெள்ளமென
பெ
ருக்கெடுத்து ஓடுதடி...

உன்
நினைவுகளை தழுவிக்கொண்டே...

ஏழு ஜென்மம்
வேண்டும் என்பா
ர்கள்...

எனக்கு வாழும்
இந்த ஜென்மம்...

உன் நினைவுகள் என்னை
தொடராமல் இருந்தால் போதுமே...

விழிக்குள்
மௌன வார்த்தை...

இதழ்களுக்குள்
குருட்டு பார்வை...

உயிருக்
குள் இதயமில்லா
உன் நினைவுகள்...

பார்வையில் ஒன்றுபட்டு
இதயத்தில் ஈர்க்கப்பட்டு...

உன்னோடு
ஒன்று சேர்ந்தேன்...

உன்
மனம் மட்டும் ஏனோ...

என் மனதோடு
சேர்ந்தும் சேராமலும்...

உன் தோல் சாய
அன்று ஏங்கினேன்...

இன்று உனக்காக
ஏங்குகிறேன் தேடி வருவாயோ.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (5-Dec-22, 5:30 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 214

மேலே