நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
கொஞ்சும் தமிழும் தேனும் இதழிருக்கும்
அஞ்சாத மனமிருக்கும் கண்ணில் கயலிருக்கும்
வஞ்சியுனைப் பார்க்கப் பார்க்க கவிபிறக்கும்

பாடல் குறிப்பு :
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்னவென்று
தெரியுமா என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல் வரியை
முதலடியில் அமைத்துப் புனையப்பட்டகவிதை

எழுதியவர் : கவின் சாரலன் (7-Dec-22, 12:10 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 36

மேலே