மான்விழி உனைக்கான ஓடோடி வந்தேன்
நான்மல ரோடே னிங்கு நின்றேன்
தேன்சிந்தும் மாலை மலர்த்தோட்டம் தன்னில்
வான்நிலவு ஒளிசிந்தும் அந்திப் பொழுதில்
மான்விழி உன்வரவைப் பார்த்தே நின்றேன்
பாடல் குறிப்பு :
கண்ணதாசனின் நான் மலரோடு ஏன் இங்கு நின்றேன்
ஏன் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன் என்ற
இனிய பாடல் வரியை முதலடியாகக் கொண்டு
புனையப்பட்ட கவிதை
மான்விழி உன்னைக்கான ஓடோடி வந்தேன் என்றும்
அமைத்துப் படித்துப் பாருங்கள்