ரியா

இவள் என் வீட்டு ராஜ்யத்தின் அரசி
இவளை அரியணை ஏற்றியது என் சகோதரி...
உன் அன்புக்கு ஈடில்லை
இவ்வுலகில
உன் புன்னகைக்கு ஈடாகுமா?
இவ்வுலகில்...

செல்லமாய் சிறு அழுகை
பதறிவிடும் உனை பார்க்கத்தான்...
நீ ஆண்டு பல காத்திருந்து கிடைத்த
அறுமருந்து என் அக்காவின் வாழ்வுக்கு
பல நாள் மனம்நொந்த வாழ்க்கையின்
வைர சுரங்கம் நீ....
வயதில் சிறிய வாக்கியம் நீ...
குழந்தை எனும் தெய்வம் நீ...
அழுகையில் எனை கவறும் ஆசையும் நீ..
மழையில் காணும் வாசமும் நீ...
வார்த்தையில் காணும் வசந்தமும் நீ...

உன் அம்மா
உனை காண்பதை தவிர வேறொன்றும்
எண்ணியத்தில்லை என்னாளும்
கண்ணுக்குள்ளே உன் பிம்பத்தை
வைத்து கொண்டு இரவோடும் பகலோடும்
சண்டையிட்டு சாதிப்பது செல்வத்தை அல்ல
உன்னோடு செலவிடும் நேரத்தை...

எழுதியவர் : UmaNatarajan (7-Dec-22, 1:11 pm)
Tanglish : rea
பார்வை : 69

மேலே