557 தீயும் காற்றும் சீர்பெற அமைத்தோன் தேவன் – தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 15

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)

வாயுவல் விசையோ டெய்தின்
..மகியினோ(டு) உயிர்கள் யாவும்
வீயுமென் றக்கால் மெல்ல
..வீசச்செய் துலகெங் குஞ்சார்
தேயுமே லெழுந்து நிற்கிற்
..செகமுய்யா தெனவத் தீயை
வேயும்பல் பொருட்குள் வைத்து
..வேட்டவா றளிப்போன் யாரோ. 15

– தெய்வத்தன்மையும் வாழ்த்தும் நீதிநூல்,
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

காற்று கடுமையாக வீசினால் உலகத்தோடு உயிர்கள் எல்லாம் அழிவுபாடு எய்துமென்று அக் காற்றை மெல்லென வீசச் செய்தும், தீ மேலோங்கி நிற்குமானாலும் உலகம் அழிந்துபடும்; அங்ஙனம் தீ மேலோங்கவொட்டாது எல்லாப் பொருள்களிலும் அடங்கி நிற்குமாறு செய்து வேண்டும்போது வெளிப்படத்தந்தும் உதவுகின்றவன் யாவன்? அவனே கடவுளாவன்.

வாயு-காற்று. வல்விசை-கடுமை. தேயு-தீ. செகம்-உலகம். வேட்டவாறு-வேண்டிய அளவு. அளிப்போன்-உதவுவோன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Dec-22, 8:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

சிறந்த கட்டுரைகள்

மேலே