அவள் ஒரு முடிவில்லா பயணம் -3

கதிர் இடம் பாரதிக்கு நல்ல மாற்றம் தெரிகிறது அவன் மாறிக்கொண்டே வருகிறான் என அவள் நினைக்கிறாள் பாரதியும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறாள் எப்படி என்றாலும் கதிர் நம்மிடம் பேசிவிடுவார் நமக்கு எந்த கவலையும் இல்லை நம் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என நினைக்கிறாள் அவளுக்கு படிப்பின் மீது அதிக ஆர்வம் வருகிறது படிக்க வேண்டும் என அவள் முடிவு செய்கிறாள் இதைப் பற்றி எப்படி கதிரிடம் கேட்பது என யோசிக்கிறாள் ஆனாலும் அவளுக்கு தேவையான அவளே வாங்கி படிக்கிறார் படிப்பின் மீது அவருக்கு அதிக ஆர்வம் இருப்பதால் ஏதாவது ஒன்றை படிக்க வேண்டும் கற்றுக்கொள்ள வேண்டும் புது அனுபவமாக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார் இந்த சமயத்தில் தான் கதிர் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும் வழியில் ஒரு பெண் மயங்கி கீழே விழுந்து இருக்கிறாள் அவள் யார் என்று தெரியாமல் கூட்டமாக எல்லோரும் அவளை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் அந்த இடத்திற்கு கதிரும் வருகிறான் வந்து பார்த்தால் அந்தப் பெண் இவனின் முன்னாள் காதலி கார்த்திகா ஆபத்தான நிலையில் இருக்கிறாளே இவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாமா? இல்லை இப்படியே விட்டு செல்லலாமா என அவன் யோசிக்கிறான் சிறிது தூரம் வந்துவிட்டான் ஆனாலும் அவன் மனசாட்சி கேட்கவில்லை அவளுக்கு என்ன தான் ஆனது என போய் பார்க்கலாம் என வந்து மயங்கி கீழே விழுந்திருப்பவளை எழுப்புகிறார் எழுந்திருக்கவில்லை என அருகில் இருக்கும் ஆட்டோ ஒன்றை அழைத்து அவளை பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறான் மருத்துவர்கள் யார் என்ன ஆனது என கேட்கிறார்கள் தெரியவில்லை நான் வரும் வழியில் மயங்கி விழுந்து இருக்கிறார்கள் அதனால் தான் இங்கு அழைத்து வந்தேன் என கதிர் சொல்கிறான் சரி இருங்கள் நாங்கள் என்ன என்று பார்த்துவிட்டு சொல்கிறோம் என உள்ளே அழைத்து செல்கிறார்கள் வெளியில் இவன் என்ன ஆனது எப்படி அவள் வீட்டிற்கு சொல்வது யாருக்கு போன் செய்வது என யோசிக்கிறான் சரி இருந்தாலும் டாக்டர்கள் சொல்வதை வைத்து அதற்கான முடிவை நாம் எடுக்கலாம் என கதிர் யோசித்துக் கொண்டிருக்கிறான் மருத்துவர்கள் உள்ளே சென்று பார்த்துவிட்டு வெளியில் வந்து அவர்களுக்கு எதுவும் இல்லை லேசான மயக்கம் தான் நன்றாகத் தான் இருக்கிறார்கள் நீங்கள் உள்ளே போய் பாருங்கள் என சொல்கிறார்கள் உள்ளே போகலாமா இல்லை வேண்டாமா என்ன செய்வது என யோசித்துக் கொண்டே இருக்கிறான் ஒரு செவிலியர் வெளியில் வருகிறார் நீங்கள் தானே அவர்களை கொண்டு வந்து சேர்த்தது உங்களை அவர்கள் பார்க்க வேண்டும் என உள்ளே வர சொல்கிறார்கள் பாருங்கள் என அழைக்கிறாள் சரி என கதிர் உள்ளே போகிறான் பார்த்தால் கதிருக்கும் அவளை பார்க்க ஒரு மாதிரியாக உள்ளது அவளுக்கு அதிர்ச்சியாக உள்ளது என்ன பேசுவது என்று தெரியாமல் கதிரும் நிற்கிறான் கார்த்திகாவும் இருக்கிறாள் நன்றி என்னைக் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்ததற்கு என கார்த்திகா சொல்கிறாள் நான் வரும் வழியில் நீ மயங்கி கிடந்தாய் அதனால் தான் பார்த்து விட்டுப் போக மனமில்லை அதான் கொண்டுவந்து உன்னை சேர்த்து விட்டு போகலாம் என வந்தேன் சரி உன் கணவர் நம்பர் சொல் அவருக்கு போன் செய்கிறேன் அவர் வந்து உன்னை அழைத்துப் போகட்டும் என கேட்கிறான் இல்லை வேண்டாம் நானே போய்க் கொள்கிறேன் என சொல்கிறாள் ஏன் இப்படி இருக்கும் சமயத்தில் நீ எப்படி போவாய்? அவர் நம்பர் குடு அவருக்கு போன் செய்கிறேன் அவர் வந்து உன்னை அழைத்துப் போகட்டும் எனக்கதிர் சொல்கிறான் இல்ல கதிர் வேண்டாம் நான் சொல்வதை புரிந்து கொள் நீ கிளம்பு நான் பார்த்துக் கொள்கிறேன் என கார்த்திகா சொல்கிறாள் சரி வா நான் ஆவது உன்னை வீட்டில் விட்டுவிட்டு போகிறேன் என கதிர் கேட்கிறான் இல்லை வேண்டாம். சரி இதற்கு மேல் உன் விருப்பம் என கதிர் கிளம்புகிறான் செவிலியர் ஒருவர் வந்து இந்தாங்கள் உங்கள் பில் என கொடுக்கிறார் என்ன செய்வது என்று புரியவில்லை கார்த்திகா நான் கட்டிவிடுகிறேன் என சொல்கிறான் கதிர் இல்லை கதிர் வேண்டாம் உனக்கு எதற்கு சிரமம் நானே பார்த்துக்கொள்கிறேன் நீ இவ்வளவு தூரம் என்னை கொண்டு வந்து சேர்த்ததே போதும் பணம் எல்லாம் நீ கட்ட வேண்டாம் என கார்த்திகா சொல்கிறாள் இது ஒரு பெரிய விஷயமா நானே கட்டிவிட்டு போகிறேன் என கதிர் சொல்கிறான் வேண்டாம் என சொன்னால் கேட்காமல் கதிரே பில் கட்டி விட்டு செல்கிறான் இவளுக்கு என்ன பிரச்சனை ஏன் போன் நம்பர் கொடுக்க மாட்டேங்கிறாள் சரி அவளுக்கு ஏதாவது பிரச்சனையாக இருக்கும், நாம் ஏன் அவர்கள் குடும்ப விஷயத்தில் நாம் ஏன் தலையிட வேண்டும் நம் பிரிந்தது போதும் இதற்கு மேல் அவள் பற்றி நாம் நினைக்க வேண்டாம் இனி எல்லாம் அவள் பார்த்துக் கொள்வாள் நமக்கு இந்த விஷயம் தேவையில்லை என்று நினைத்துக் கொண்டு கதிர் வீட்டுக்கு வருகிறான் ஆனால் கார்த்திகா மருத்துவமனையில் தான் இருக்கிறாள் அவள் வீட்டில் அவளுக்கு கல்யாணம் ஆகி சிறிது நாட்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தால் அதற்கு மேல் தன் கணவர் நன்றாக குடிக்க ஆரம்பித்து விட்டார் அதனால் அவளுக்கு வாழ்க்கை பெரும் போராட்டமாக மாறிவிட்டது வீட்டிற்கு தேவையான பணம் கொடுப்பதில்லை எதுவும் இல்லை குடிக்கு அடிமையாகி விட்டார் இந்த சமயத்தில் அவளுக்கு குழந்தையும் பிறந்து விட்டது வாழ்க்கை அவளுக்கு பெரும் போராட்டம் ஆகிவிட்டது குடிக்க அடிமையாகி விட்டார் என்ன செய்வது குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது என கார்த்திகா வேலை தேடிக் கொண்டிருக்கிறார் இப்படி வேலை தேடி அலையும் சமயத்தில் தான் அவள் சரியாக சாப்பிடாமல் சாப்பாடு இல்லாத நிலையால் அவள் மயங்கி விழுந்திருக்கிறார் இதைப் பற்றி எப்படி கதிரிடம் சொல்வது அவன் என்ன நினைப்பான் அதனால் தான் அவள் சொல்ல மறுத்து விட்டால் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள் சந்தேகப்பட்டு அவனுக்கும் உனக்கும் என்ன உறவு இருக்கும் பிரச்சனையே போதும் இதற்கு மேல் பிரச்சனை வந்தால் தாங்க முடியாது என முடிவு செய்து தான் கதிரை வீட்டுக்கும் வேண்டாம் நானே பார்த்துக்கொள்கிறேன் என சொல்லி திருப்பி அனுப்பி வைக்கிறாள் நன்றாக இருக்க வேண்டும் என நினைத்து வேறு ஒருவனுக்கு கல்யாணம் செய்து வைத்தார்கள் கொஞ்ச நாட்கள் இருவரும் சந்தோஷமாக இருந்தார்கள் அதற்கு மேல் அவன் குடி சந்தேகம் என மாறி கார்த்திகாவின் வாழ்க்கையை வீணாகிவிட்டது அவள் ஆசைப்பட்ட கதிரை கல்யாணம் செய்து இருந்தால் சந்தோஷமாக இருந்திருப்பாள் இப்பொழுது அவன் படும் அவஸ்தை சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது.


பயணம் தொடரும்...

எழுதியவர் : தாரா (13-Dec-22, 5:29 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 280

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே