560 உறுப்பினில் படைவலி உறுத்தினோன் கடவுள் – தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 18

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)

ஆயுதஞ் செய வறிந்த
..நரர்மெய்யி லாயு தங்கள்
தோய்தரச் செய்யா னன்ன
..தொழிலிலா விலங்கின் பல்லிற்
சாய்தரு முகிரின் மூக்கிற்
..றலையினிற் காலில் வாலில்
ஏய்தரு படைக்க லங்கள்
..இயற்றினோன் வயத்தி னோனே. 18

– தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

தொழிற் கருவியும் படைக் கருவியும் தோமின்றிச் செய அறிந்த மக்கட்கு அவர்தம் உடம்பில் அரிமா போன்ற விலங்கினங்களுக்கு அமைத்தது போன்று கூரிய நகம், பல், கொம்பு, முதலிய ஏதும் அமைத்திலன்.

அச் சிற்றுயிர்களுக்குப் பல்லில், வளைவான நகங்களில், கூரிய மூக்கில், தலையில் கால்களில், வாலில் பொருத்தமான படைக் கலங்களை அமைத்தருளினன். அவனே தன்வயம் வாய்ந்த கடவுளாவன்.

ஆயுதம்-படைக்கலம். சாய்தரும்-வளையும். உகிர்-நகம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Dec-22, 9:04 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

சிறந்த கட்டுரைகள்

மேலே