ஆவலில் கோடிபெறும் ஆரணங்கோ - வஞ்சி விருத்தம்

வஞ்சி விருத்தம்
(கூவிளம் கூவிளங்காய் கூவிளங்காய்)
(1, 3 சீர்களில் மோனை)

நாவலில் முந்திவரும் நாயகியோ?
பூவினைப் போலவுள புன்னகையோ!
தேவிநீ வீதிவரும் தென்றலுமோ?
ஆவலில் கோடிபெறும் ஆரணங்கோ!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Dec-22, 3:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே