பிரிந்தா வனத்தில் பூவெடுத்து

பிரியத்தை நெஞ்சைப்
பிளந்து காட்டிடவா /
பிரியமானவளே பிரிந்தாவனத்தில்
பூவெடுத்து வச்சிக்கவா /

சந்தேகப் படர்கொடியை
அடியோடு அறுத்தெறிந்திடு/
சங்கொலியாய் சிரித்து
நெஞ்சோடு சங்கமமாகிடு/

பிரித்திட முடியாமல்
பாலோடு நீராகிடுவோம் /
சரித்திரக் காதலாய்
மாற்றிடப் போறாடிடுவோம்/

சந்தோச உலகமே
எந்நாளும் நீயேதானம்மா /
சத்தியமாய் முடியாது
பிரிவைத் தாங்கம்மா/

உத்தரவாதம் கொடுக்கின்றேன்
என்னுள்ளே சரிபாதியென /
உத்தமனாய் வாழ்ந்திடுவேன்
உனக்காகவே நானென/

எழுதியவர் : ஆர் எஸ் கலா (16-Dec-22, 7:07 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 90

மேலே