சித்திரம் பேசுதடி

தாமரைப்பூ வண்ணத்தில்
வதனம் கொண்டவள் /
கருவண்டு உருவில்
விழிகள் அமைந்தவள்/

தேன் கிண்ணம்
இதழ்கள் சுமப்பவள் /
தெவிட்டாத அழகினை
திரட்டி எடுத்தவள் /

சித்திரம் பேசுதடி
உற்று நோக்கையிலே /
கற்றுத் தந்தாள்
ஆயிரம் கவிதைகளடி/

எழுதியவர் : ஆர் எஸ் கலா (16-Dec-22, 7:12 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : sithiram pesuthadi
பார்வை : 171

மேலே