உள்ளமே உனக்குத்தான்

நூல் இடை
உனக்காகவே ஏங்கையிலே/
மேலாடை உனக்கென
தானாக விலகையிலே/

பாலாடை மேனியிலே
பூவாடை வீசையிலே/
கூடிடும் இரவுகளை
விழிகளும் தேடையிலே/

சட்டன எழுந்திடும்
நாணம் சஞ்சலமாகிடனும்/
பஞ்சணை ராத்திரியை
நெஞ்சணையாய் மாற்றிடனும்/

கொஞ்சும் புறாவோடு
கொஞ்சி விளையாடிடனும்/
என்றெல்லாம் கற்பனையில்
நான் மிதக்கையிலே/

உறவுகளின் சொற்பொழி
இதயத்தினுள் நுழைந்திடுமோ/
எந்நாளும் என்னவளே
உள்ளமே உனக்குத்தானடி/

எழுதியவர் : ஆர் எஸ் கலா (16-Dec-22, 7:14 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : ullame unakuththaan
பார்வை : 167

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே