சர்வதேச மனித ஒற்றுமை தினம்

இதயத்தில் பிரிந்து
இணையத்தில்
இணைந்திருக்கிறோம்...!

சிரிக்க காரணம்
தேடினோம் அன்று...
சிதைக்க காரணம்
தேடுகிறோம் இன்று...!

தடுக்கி விழுந்தால்
தூக்கிவிட ஆளில்லை...
மூச்சு முட்டும் நண்பர்கள்
முகநூலில் மட்டும்...!

விந்தையிலும் விந்தை
மெய்ஞானம் தொலைத்து
மனிதம் மறந்த
நம் விஞ்ஞான வளர்ச்சி...!

வேற்றுமை களைந்து
ஒற்றுமையில் இணைய
சர்வதேச மனித ஒற்றுமை தினம்
வாழ்த்துக்கள்...!

எழுதியவர் : Parveen (19-Dec-22, 7:56 pm)
சேர்த்தது : Parveen
பார்வை : 118

மேலே