ஞானம் தரும் மனநிறைவு
பணமென்பதே செலவழியுமே,
குணமென்பதே பல்கிப்பெருகுமே,
மணமிகுமே நல்குதலாலே,
கணமிகுமே பேராசையாலே.
பேராசையாலே பெருந்துன்பமே,
பிரயாசையாலே வெற்றிக்கிட்டுமே,
மண்ணாசைமீட்டுமே பெரும்யுத்தமே,
பெண்ணாசைமீட்டுமே பெரும்பாவமே.
பெரும்பாவத்தாலே நற்கதியில்லையே,
தரும்ஞானமே மனநிறைவே,
சீருஞ்சிறப்புமே சீவகாருண்யமே,
தீரும்வினையாவுமே பேரன்பாலே.
பேரன்பாலே தெளிந்திடும்ஞானமே,
என்பாலே நானுணர்ந்திடவே,
உன்பாலே நீயுணர்ந்திடவே,
அன்பாலே செப்புகின்றேனே.