உலகோரால் தூற்றப்படுவோன் ஒழிந்துவிடல் நலமாம் – அறநெறிச்சாரம் 211

நேரிசை வெண்பா

ஆற்றாமை ஊர அறிவின்றி யாதொன்றும்
தேற்றான் எனப்பட்டு வாழ்தலின் - மாற்றி
மனையின் அகன்றுபோய் மாபெருங் காட்டில்
நனையில் உடம்பிடுதல் நன்று 211

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

துன்பங்கள் மிக, அறிவில்லாமல் தன்னுயிர்க்கு ஆவதோர் உறுதி ஒன்றும் தெரியாதவனெனப் பலரானும் இகழப்பட்டு வாழ்தலினும், இல்வாழ்க்கையை விட்டு மனையின் அகன்று, விலங்குகள் வழங்கும் பெரிய காட்டிடைச் சென்று, இனிமை பயவாத அவ்வுடலினை விடுதல் நல்லது.

குறிப்பு: இடுதல் - போடுதல், இறக்க

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Dec-22, 4:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே