மின்னல் வெட்டு

கவின் சாரலர் அவர்களே

இந்த நாலுசீர் கொண்ட நாலுவரி எப்படி கலிவிருத்தம் ஆகும்.
கீழே பாருங்கள்


மின்னலே உன்னை விழியில் ஏந்தி
பின்னலில் மல்லிகை சரத்தைச் சூடி
சன்னல் ஓரத்திலிவள் சாயந்திரம் நின்றால்
கன்னலாய் காதல் கவிசிந்துதே நெஞ்சில்

இது எந்த வாய்ப்பாடிற்கும் பிடிபடாத இலக்கணம் இல்லா எந்த பாவினமும் சேராத
பாட்டு

கலி விருத்தம் கலித்துறையில் வாய்ப்படுக்கு தக்கபடி மாற்றப்படும்
சீருக்கு அடுத்த சீர் எப்படி மாற்றப்படுகிறது என்பதை கவனித்து
அதற்கு ஏற்றவாறு நாமும் செய்யலாம். ஆனால் நமக்குத் தோன்றும்
சீர்களை நமக்கு ஏற்றவாறு மாற்றுவது பிறகு அதைக் கேட்டால் பாவினம் என்பது எல்லாம் சொற்களை தேடிப்பிடித்து எழுத முடியாதவர்கள் அல்லது வாய்ப்பாடு தெரியாத பாமரர் செய்யும்
தவறாகும்.

பாவினம் என்பது
வெண்பா = நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா , பஃறொடை
விருத்தம் = கலிவிருத்தம் ஆசிரிய விருத்தம் வெளிவிருத்தம்
கலிப்பா கலிவிருத்தம் கலித்துறை கொச்சகம்
வெண்தாழிசை ஆசிரியத்தாழிசை கலித்தாழிசை
ஆசிரியப்பா = நிலைமண்டில ஆசிரியப்பா அடிமறி மண்டிலம்
வஞ்சி == வஞ்சி விருத்தம் வஞ்சித் துறை வஞ்சி அகவற் போன்றவை
இப்படி பாவினம் இலக்கணமுடன் இருக்கிறது.
நீங்கள் இப்போது எழுதியுள்ள ஒரு கவிருத்தம் இலக்கிய பாடல்களில் இருந்தால் உதாரணம் காட்டி எழுதுங்கள்.
அப்படியில்லை எனில் இது இன்ன வகை பாட்டு என்று எழுதி மற்றவரை தவறு செய்ய விடாதீர்கள்.

ஓரத்திலிவள் - = தேமாந்தன்நறும்பூ
சாயந்திரம் = தேமாங்கனி
கவிசிந்துதே == புளிமாங்கனி
கலி விருத்தம் எனின் 1,2,3, சீரிலும் கனிச்சீர் கூடாது
கலித்துறை எனின் 1,2,3,4, சீரிலும் கனிச்சீர் கூடாது.

4, 5 சீர்களில் காரணம் காட்டி அது சரியெனின் ஏதாவது ஒருஅடியில் ஒருசீர் கனிச்சீர் வரக்காரணம் விளக்க ஏற்பார்கள். இன்னும் பாவினன் பாவினம் என்று தவறான பதிலையே உதாரணம் காட்டாது கூறி கொண்டிருக்க வேண்டாம்.

தேமா. கூவிளம். தேமா. விளம்

மாசில் வீனையு மாலை மதியமும்
வீசு தென்றலு வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்யையும் போன்றதே
யீச னெந்தை யினையடி நீழலே

இப்பாடலில் கூவிள தேமா வாக மாறும்போதும் தேமா விள மாக மாற்றும்போது எப்படி கையாளப்படுகிறது என்பதே முக்கியம்

இந்த விருத்தத்தில் வல்லொற்று வராமல்
நெடிலும் மெல்லொற்றும் மிகுந்து பாடலின் இசைக்கு
ஏற்ப இழையும் என்று அமைத்துள்ளார்கள்

ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு
பூசை முந்தவு தக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற் றேன்மற்றிக்
காசி கொற்றத் திராமன் கதையரோ ....... கம்ப இராமாயணம்

இதில் றேன்மற்றி காயாக மற்ற கடைச்சீர்கள் விளச்சீராக வருவதை எப்படி மாற்றியுள்ளது என்பதை கவனிக்கவும்.

எதையும் தக்க விளக்கத்துடன் எழுத நன்று. யாப்பார்வலர்கள்
உண்மையை விளக்குவது அவர் கடமையல்லவா? மற்றவர்கள் உங்களைபின்பற்ற அவரும் பிழையாளராகக் கருதப்படுவர்

எழுதியவர் : பழனி ராஜன் (25-Dec-22, 9:12 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : minnal vettu
பார்வை : 64

மேலே